KUMARI KANDAM


     குமரிகண்டம் பற்றிய வாதமானது 1907 -ல் ஆரம்பித்தது.20,000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சிலபதிகாரம்,புறநானூறு போன்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தில் நவலந்தீவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குமரி கண்டத்தில் ஏழுதெங்கு மலைநாடு,ஏழுகுன்ற நாடு போன்று 49 நாடுகள். வடக்கு பகுதியில் குமரி ஆறும் தென் திசையில் பஃறுளி ஆறு என்ற இரண்டு மிகப்பெரிய ஆறுகள் ஓடின. இந்த இரண்டு ஆறுகளுக்கு இடையேயான தூரம் 700 காடம் ஆகும் (1 காடம் 1.1 கி.மீ). மேலும் குமரி கொடு, மேருமலை என்ற இமயமலையை விட மிகப்பெரிய இரண்டு மலைகள் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.


                 இப்பதியை சங்ககால பாண்டியர்கள் ஆண்டு வந்துள்ளனர். இந்நிலப்பகுதியை அவர்கள் நாவலந்தீவு என்று அழைத்தனர். முதலில் அவர்கள் தென் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அப்போதும் பட்ட கடற்கோலால் வடக்குநோக்கு நகர்ந்து கபாடபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் மீண்டும் ஏற்பட்ட மற்றுமொறு கடற்கோலால் கபாடபுரமும் அழிந்தது. 

                மேலும் அவர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து சேர, சோழ மன்னர்களை வெற்றி கொண்டு தற்போதைய மதுரையை தலைநகராக மாற்றி ஆட்சி புரிந்தனர். குமரி கண்டத்தில் அகத்தியம் போன்ற பல நூல்கள் இயற்றபட்டதாகும். கூறப்படுகிறது. ஆனால் அவை ஏதும் நமக்கு கிடைக்கப்பெறவில்லை.

குமரி கண்டம் பற்றிய உண்மைகள்:

              ஆங்கில புவியியல் ஆய்வாளரான எர்ன் ஹக்கில் என்பர் லெமுரியா என்ற கண்டம் என்ற ஒன்று இருந்ததாக முதன் முதலில் கூறினார்.

              லெமூர் இன குரங்குகள் இந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா நாடுகளில் மட்டும் இருப்பதை கண்டறிந்தார் இவை எவ்வாறு இடம் பெயர்ந்து இருக்கும் என்ற ஆய்வை தொடங்கிய அவர் இறுதியாக இந்த மூன்று நாடுகளையும் இணைக்கும் ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு இருந்திருக்கவேண்டும் என்றும் அது தற்போது கடலுக்கடியில் மூழ்கியிருக்கலாம் என்று கூறினார். அதற்கு சான்றாக இந்திய பெருங்கடலில் மெளரிசியா என்ற நிலப்பரப்பு முழ்கியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.



             பல தமிழ் இலக்கியங்களிலும் குமரிகண்டம் பற்றிய பல தகவல்கள் உள்ளன.

               "வடிவேலெறிந்த வான் பகைபோறாது
     பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்து
     குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

என்று குமரி கண்டம் பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது.

குமரிகண்டம் இல்லை என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள்

             குமரி கண்டம் பற்றிய கருத்தை உடைப்பது கண்ட நகர்வு கோட்பாடு மற்றும் ஆப்பிரிக்க இடம் பெயர்தல் கோட்பாடு -ம் தான். ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனிதன் புலம்பெயர்ந்தான் என்று அறிவியியல் கூகின்றது. மேலும் அவர்கள் தனது பண்பாடு, நாகரீகம், மொழி போன்றவற்றை ஏற்படுத்தி கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.


         கண்ட நகர்வு கோட்பாடானது தற்போது உள்ள கண்டங்களை ஒன்றாக இணைத்தால் அணைத்தும் மிகச் சரியாக பொறுந்துகின்றன ஆதலால் இவ்வாறு ஒரு நில பரப்பு இருந்ததே இல்லை என்று கூறுகின்றனர். மேலும் கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்புவரை எந்த ஒரு எரிகல் மலை வீழ்ந்ததாக கண்டறியப்படவில்லை. மேலும் ஒரு கண்டத்தையே மூழ்கடிக்கும் அளவுக்கு உருவாக வாய்ப்பே இல்லை. அவ்வாறு எவ்வளவு பெரிய அலையகடல் நீர் நிலத்திலேயே தங்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

         மேலும் 1950 -களிலேயே ஐரோப்பா தேசங்களில் இவ்வாறு ஒன்று இல்லை என்று முடிந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இதை வைத்து 1970 ஒரு மாநாடே நடைபெற்றுள்ளது. இது போன்று எந்த ஒரு ஆய்விலும் குமரி கண்டம் என்ற ஒன்று என்று தான் கூறப்பட்டுள்ளது. 15,000 ஆண்டுகளுக்கு மூன்று கடல் நீரானது இது போன்று எந்த ஒரு ஆய்விலும் குமரி கண்டம் என்ற ஒன்று என்று தான் கூறப்பட்டுள்ளது. 15,000 ஆண்டுகளுக்கு மூன்று கடல் நீரானது கண்ணியாகுமரி கடல்பகுதியில் சுமார் 100 மீட்டர் உயர்ந்து உள்ளதே தவிர ஒரு கண்டத்தை மூழ்கடிக்கும் அலைக்கு ஒரு பேரலை உருவாகவில்லை என்பதே உண்மை 

        குமரி என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்பது உண்மை ஆனால் ஒரு கண்டம் அளவுக்கு பெரிதல்ல என்பதே உண்மை   

                      “வாழ்க தமிழ்"

கருத்துகள்